தமிழ் உறவுகளே வணக்கம்.

தமிழ்...என்றாலே நாவினில் தேன் பாய்ந்து இலக்கியச்
சுவையை பகிர்ந்துகொண்டது கடந்த காலம். ஆனால் இன்று
செம்மோழி தமிழ்மொழியை மீட்டு எடுக்கவேண்டிய அபாய‌
நிலையில் உள்ளோம்.

தமிழன் தன் தாய்மொழியை கொலை செய்வதன் மூலம் தன்னையே
அசிங்கப்படுத்தி கொள்வதைப் பார்க்கிறோம்.

தமிழைக் காக்க இனி "களம்" இறங்குவது மிக அவசியம். ஒரு இனத்தின் அடையாளம் மொழி மட்டுமே.இன்றைய வணிக உலகமய‌மாக்களில் பணம் தான் முதன்மையாகிறது. அதேநேரத்தில் தன் மொழியை பாழாக்குவதை நாம் கண்டு கொள்ளாமல் இருக்கவும் முடியாது.

ஆகவே மொழியை பாதுகாக்க ஒரு படை தேவை. அதில் தமிழ் தன்னார்வலர்கள், உண்மையாக களப்பணியாற்ற வேண்டும். நமது மக்களிடம் செல்ல வேண்டும்,அவர்களைப் புரிந்து கொள்ள செய்ய வேண்டும்.

இது ஒரு பெரிய சமுதாயத் தொண்டு மட்டுமல்ல. நாளைய தமிழனின் அடையாளம் காட்டும் ஒரு அர்ப்பணிப்பு ஆகும்.

வாருங்கள் தமிழர்களே....கை கோர்ப்போம்...தமிழின்
மேன்மையைக் காப்போம்.

                     தமிழ் வாழ்க.,தமிழினம் வெல்க...!


தமிழ்பேசு இயக்கத்தின் பணி:

 

1. தமிழ் மொழியின் வரலாற்றை அடித்தட்டு மக்களிடம் கொண்டுசெல்வது.

2. தமிழிலேயே பேச ஊக்குவிப்பது.

3 .பள்ளி மாணவர்களுக்கு தமிழ் போட்டி வைத்து பாராட்டுவது.

4. வணிக நிறுவன‌ங்கள், சிறு வியாபாரிகளின் பெயர்ப்பலகை தமிழிலும் வைக்கப் பாடுபடுவது.

5. ஊர்தி மூலம் துண்டு பிரசுரம், பரப்புரை செய்வது.

6 .நல்ல தமிழ்நூல்களை அறிமுகப்படுத்துவது.

7. தமிழ் ஆராய்ச்சியாளர்களை மரியாதை செய்வது.தமிழின ஆர்வலர்களை அடையாளம் காண உதவுவது.

8. குழந்தைகள் அப்பா,அம்மா என அழைக்க‌ வேண்டுவது.

9. வீதிப் பெயர்கள், பலகைகள் தமிழிலும் இருக்க நடவடிக்கை எடுத்தல்.

10. தமிழ் ஆர்வலர்களை ஒன்றிணைப்பது மற்றும் ஊக்கப்படுத்துவது.



 
Make a Free Website with Yola.